கொத்சு நைவேத்தியம்!
ADDED :4629 days ago
சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்கு சம்பா சாதத்துடன், கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து உப்பு, புளி சேர்த்து சுண்டக் கொதிக்க விட்டு பசை பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து, சூட்டோடு இறக்குவர். இதுவே கொத்சு நைவேத்யம் எனப்படும்.