உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவர்கள் நீராடும் தீர்த்தம்!

தேவர்கள் நீராடும் தீர்த்தம்!

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணைக்கட்டிற்குள் இருக்கும் பாண தீர்த்தம் அருவி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய காரியங்களை இங்கே செய்வது சிறப்பு என்கின்றனர். பாண தீர்த்தத்தில் சில நேரங்களில் தேவர்களும், ரிஷிகளும் நீராட வருவதாகக் கூறுகிறார்கள். சில புண்ணிய ஆத்மாக்கள் நீராட வரும்போது அவர்கள் கண்களுக்கு மட்டும் ரிஷிகளும் தேவர்களும் தெரிவார்களாம். பாணதீர்த்தத்திற்கு பாபநாசம் அணைக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளே படகில் செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த அருவி கண்களுக்குத் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !