நான்முக வடிவில் ஈசன்!
ADDED :4629 days ago
ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ள செபரோலு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இங்கு ஈசன் பிரம்ம லிங்கேஸ்வரராக, அதாவது லிங்கத்தின் நான்கு புறமும் முகத்தோடு காட்சி தருவது அபூர்வக் காட்சி. இவரை பக்தர்கள் தரிசிக்க வசதியாக கோயிலின் கருவறைச் சுற்றில் ஜன்னல்கள் இருப்பதும், ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி வெளிப் புறத்தில் தனி மண்டபத்தில் மூலவருக்கு எதிரே காட்சி தருவதும் சிறப்பாகும்.