கந்தன் இடுப்பில் கத்தி!
ADDED :4629 days ago
நாமக்கல் மாவட்டம் பேளூக்குறிச்சி அருகில் கொல்லிமலை அடிவாரத்தில் பழநியப்பர் கோயில் உள்ளது. இங்கு முருகன் வேடனைப் போல கொண்டையிட்டு அதில் கொன்றை மலரும் சூடியிருக்கிறார். காலில் செருப்பும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடுப்பில் கத்தியுடன் அருள்பாலிக்கும் இவரை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலும் என்கிறார்கள்.