உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சூரசம்ஹாரம் நாளை (மார்ச் 18) நடக்கிறது. கோயிலில் மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனித் திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகினார். பத்தாம் நாள் திருவிழாவாக நாளை காலை சுப்பிரமணிய சுவாமி தங்கப்பல்லக்கிலும், வீரபாகுத் தேவர் சிம்மாசனத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு, சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 19ல் பட்டாபிஷேகம், மார்ச் 20ல் திருக்கல்யாணம், மார்ச் 21ல் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !