உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா!

திருப்பூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா!

திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா, பொரி மாற்றுதல் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், சரளைக்காடு, மாஸ்கோ நகர், ஞானப்பிரகாஷம் வீதி, வெள்ளை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜையுடன் பட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தப்பட்டது. நேற்று காலை பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். அதன்பின், பொங்கல் வைக்கப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மதியம், உச்சி காலை பூஜை முடிந்ததும், கிடாய், கோழி பலியிடப்பட்டது. இன்று காலை, மகா அபிஷேகம், மஞ்சள்நீர் சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !