கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா துவக்கம்!
ADDED :4242 days ago
கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா இன்று துவங்குகிறது. கோவை, சித்தாபுதூரில் ஐயப்பசுவாமி பொற்கோவில் உள்ளது. இக்கோயிலின் 45-வது ஆண்டு உற்சவ ஆறாட்டு விழா இன்று மாலை துவங்குகிறது. இதையொட்டி கோயில் கொடிமரத்திற்கு பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாட்டுவிழா நடக்கிறது. அந்நாளன்று ஐந்து யானைகள் அணிவகுத்து வர ஐயப்பன் திருவீதியுலா நடக்கிறது. இக்கோவிலில் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.