வாமன புரீஸ்வரர்!
ADDED :4579 days ago
கடலூர் குமணங்குளம் வழியில் 13 கி.மீ. தொலைவில் உள்ள திரிமாணிக்குழியில் வாமனர் வழிபட்ட வாமனபுரீஸ்வரரின் திருக்கோயில் அமைந்துள்ளது. வாமன பிரம்ம÷க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடிய நடுநாட்டு தேவாரத் தலம். மகாவிஷ்ணு வாமனராய் உருவெடுத்து மகாபலியைக் கொன்ற பாவம் தீர வழிபட்ட தலம். இக்கோயிலின் கருவறைக்கு, தெற்கு வாயிலின் வழியே சென்றுதான் தரிசிக்க முடியும்.
சந்தன மரம், வில்வமரம், சரக்கொன்றை ஆகிய மூன்றும் தல மரங்களாக உள்ளன. மூலவர் பீமருத்ர வடிவம் கொண்டவர் என்பதனால் கருவறை எப்போதும் திரையிட்டு மூடியிருக்கும். இவருக்கு (பீம சங்கன ) பூசை (திரைக்கும்) செய்த பிறகே, மூலவருக்குப் பூசை நடை பெறும். இத்தலத்தை ஒருமுறை வழிபடுவது காசியை 16 முறையும், திருவண்ணாமலையை 8 முறையும், சிதம்பரத்தை 3 முறையும் வழிபடுவதற்குச் சமம் என்பார்கள்.