பாதியில் நின்ற கோபுரம்!
ADDED :4579 days ago
மதுரை மீனாட்சிக்குக் கோயில் கட்டிய போது கிழக்குப் பகுதியில் ஆவணி மூல வீதியை அடுத்து ராஜகோபுரம் ஒன்று கட்டப்பட்டது. பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜகோபுரத்தில் இருந்த கற்களில் தேரை விழுந்துவிட்டதாம். அதற்கு மேல் பணியைத் தொடர்ந்தால் கோபுரம் தாங்காது எனச் சிற்பிகள் எச்சரித்ததால் உடனே அப்பணி நிறுத்தப்பட்டதாம். இக்கோபுரம் இப்போதும் பாதியில் கட்டப்பட்ட நிலையில் தான் காட்சி அளிக்கிறது.