ஆறு நந்திகளோடு சிவசக்தி !
ADDED :4579 days ago
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஏழூர் மாதேஸ்வரன் கோயிலில் ஊஞ்சல் மரத்தடியில் உள்ள சிவசக்தி, தனக்கு முன்னே ஆறு நந்திகளோடு காட்சி தருகிறார். இங்குள்ள ஐந்து தலை நாகருக்கு ஒவ்வொரு திங்களன்றும் விஷேச பூஜை நடைபெறுகிறது. நாகதோஷம் உள்ள பக்தர்கள், இங்கு வரிசையாக பிரதிஷ்டை செய்திருக்கும் 32 நாகர்களுக்கு பாலபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்படிச் செய்வதால் பக்தர்களின் நாகதோஷம் விலகுவதாக ஐதிகம்.