உள்ளூர் செய்திகள்

சவுர பீடம்!

கங்கைக்கொண்ட சோழனின் படைவீரர்கள் சாளுக்கிய நாட்டை வென்று அங்கிருந்து சவுரபீடம் எனும் சூரிய சிற்பத்தைக் கொண்டு வந்தனர். அது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரினை அருணன் இயக்க, அதன் மேற்புறம் மலர்ந்த தாமரை ஒன்று காணப்பெறுகிறது. அந்த மலரே சூரியவடிவமாகும். அதைச் சுற்றி எட்டுத்திக்கிலும் எட்டு திசைக்காவலர்களின் உருவங்கள் உள்ளன. பீடத்தின் பக்கவாட்டில் பூதகணங்கள் ஆடியும், பாடியும் மகிழ்வதுப்போல் காணப்பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !