பாறை வழிபாடு!
ADDED :4569 days ago
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சஞ்சீவி மலையடிவாரம் உள்ளது. இங்குள்ள பாறை மிகப் பெரிய உருண்டை வடிவில், விரிசல் ஏற்பட்டு தனியாக உள்ளது. இதனை ஆனைக்கல்லு என்றழைப்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறையை உடைக்க ஆங்கிலேய அதிகாரி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது; இந்தப் பாறையை உடைக்கும்போது அதிலிருந்து ரத்தம், பால் வந்ததாகவும்; இதனால் இதனை உடைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் செவி வழிச் செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது ஆனைக்கல்லுப் பாறையை மக்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டு, திருவிழா நடத்தி வருகின்றனர். சாதி, மத, இன வேறுபாடின்றி, இப்பாறையை மக்கள் இன்னமும் வழிபட்டு வருகின்றனர்.