உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம்!

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜைப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கெ õண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல் இவ்வாண்டு குருபூஜை விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடந்தது. இதில் நிறைவு நாள் விழா நேற்று குரு ஞானசம்பந்தர் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில் ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தருமபுர ம் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், மதுரை கமலைவி ஜயராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதுரை சுந்தரராமன் உண்மை நெறி விளக்கம் என்ற தலைப்பிலும், மதுரை குருசாமி தேசிகர் திருக்களிற்றுப்படியார் என்ற தலைப்பிலும், சிதம்பரம் கல்யாணராமன் உண்மைவிளக்கம் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். பின்னர் சொக்கநாதப்பெருமான் வழிபாடு,ஞானபுரீஸ்வரர் சுவாமி வழிபாடு , மதியம் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையும் நடந்தது. மாலை நடந்த விழாவில் ஆதீன கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சேகர் வர÷ வற்றார். இணைப் பேராசிரியர் சுப்புரத்தினம் ஆதீனஅடியவர்கள் என்ற தø லப்பில் பேசினார். இரவு 7 மணியளவில் தருமை ஆதீன இசைப் புலவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து ஆதீன 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞா னசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாத பெருமானை வழிபட்டுவிட் டு ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதனையடுத்து ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் திருவுருவத்திற் கு குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அலங்கரிக்க ப்பட்ட பல்லக்கில் குருமுதல்வர் திருவுருவச்சிலையுடன் பட்டினப்பிரவேச ம் நிகழ்ச்சி நடந்தது. நான்கு வீதிகளிலும் குருமகா சன்னிதானத்திற்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஞான கொலுக்காட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம் பிரான் சுவாமிகள்,குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பி ரான்சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீ ன சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள்,முதல்வர் திருநாவுக்கரசு, தருமபுரம் ஆதீன கல்வி நிறுவன முதல்வர்கள்,பேராசிரியர்கள்,பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !