வயலூர் கோவிலில் ஜூன் 10ல் தேரோட்டம்
ADDED :4163 days ago
திருச்சி: குமாரவயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தேரோட்ட திருவிழா வரும், 10ம் தேதி நடக்கிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற குமாரவயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, கடந்த, 1ம் தேதி வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாள் தோறும், பல்வேறு வாகனங்களில் உற்சவரின் திருவீதி உலா நடக்கிறது. வரும், 10ம் தேதி, 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11 ம் தேதி மதியம், 12 மணிக்கு பால் காவடிகள் ஊர்வலமும், இரவு, 8 மணிக்கு கொடியிறக்குதல், 12ம் தேதி இரவு, 8 மணிக்கு தெப்ப உற்சவம், 13ம் தேதி ஆளும் பல்லக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது.