உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயணம் பண்பை கற்றுத்தரும் : திருச்சி கல்யாணராமன்!

ராமாயணம் பண்பை கற்றுத்தரும் : திருச்சி கல்யாணராமன்!

மதுரை :மதுரை பட்டாபிஷேக ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி கல்யாணராமன், பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியதாவது:ராமன் மிக அழகு என்று கம்பர் வர்ணிக்கிறார். அவன் மிக கருப்பானவன். கண் மை இட்டுக்கொள்வது பெண்களுக்கு எவ்வளவு அழகோ அதுபோல் மிகவும் அழகானவன் ராமன். அகலிகை என்ற கல்லை மென்மையான பெண்ணாக்கிய கருணை கடவுள்.ராமாயணத்தை எத்தனை முறை கேட்டாலும் இனிக்கக் கூடியவன் ராமன். பெரியவர்களிடம் பேசும்போது மேனி வளைந்து பேச வேண்டும் என்ற பண்பை நமக்கு ராமாயணம் கற்றுத் தருகிறது. கருங்கடல் கடந்த ராமன், திருப்புல்லாணியில் இருந்து இலங்கைக்கு முதன் முதலில் பாலம் அமைத்தவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !