உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் விழா!

மகா மாரியம்மன் கோவில் விழா!

மேட்டுப்பாளையம் : வெள்ளிப்பாளையம் ரோடு சீரங்கராயர் ஓடை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் விழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா துவங்கியது. இம்மாதம் முதல் தேதி அக்னிகம்பம் நடப்பட்டது. 7ம் தேதி சக்தி விநாயகர் கோவிலிலிருந்து, பக்தர்கள் அலகு குத்தி அண்ணாஜி ராவ் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். 8ம் தேதி சுப்ரமணிய சுவாமி கோவில் படித்துறையில் இருந்து அம்மன் அழைப்பும், பூச்சட்டி கரகமும் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.நேற்று பொங்கல் வைத்து, மாவிளக்கு சுவாமிக்கு படைக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், 15ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !