நாட்ராய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா!
ADDED :4119 days ago
வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரம் நாட்ராய சுவாமி நாச்சிமுத்து அய்யன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பல லட்சம் ரூபாய் மதிப்பில், இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட் டன. கோவில் வளாகம், அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, ஆறாவது யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 7.00 மணிக்குமேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஒரே நேரத்தில், அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு தீபாரா தனை நடந்தது.பின், மூலவர் நாட்ராய சுவாமி நாச்சிமுத்து அய்யன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது, கும்பாபிஷேக புனித நீர் படும்படியாக, 30 இடங்களில் "ஸ்பிரிங்லர் மூலம், புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.