கிள்ளை காளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்!
கிள்ளை: கிள்ளை காளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, கடந்த 2ம் தேதி கோவில் முன்பு கொடியேற்றப் பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்து வந்தது. கடந்த 8ம் தேதி சக்தி கரகம் மற்றும் அலகு காவடி ஊர்வலம் நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. கிள்ளை, சின்னவாய்க்கால், பட்டரையடி உள்ளிட்ட பகுதிகளைச் @சர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பல் உற்சவத்தை முன்னாள் அமைச்சர் கலைமணி துவக்கி வைத்தார். பக்தர்கள் அகல் விளக்குகளை குளத்தில் ஏற்றி வழிபட்டனர். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் வீதியுலா நடந்தது. இன்று 11ம் தேதி இரவு பக்த மகேஸ்வரி புராண நாடகமும், நாளை 12ம் தேதி செங்கோல் தாங்கிய மாமன்னன் புராண நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத் தலைவர் ஜவகர் செய்து வ ருகிறார்.