உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமாதா ஆலயத்தில் மஹாளய அமாவாசை பூஜை நாளை துவக்கம்

கோமாதா ஆலயத்தில் மஹாளய அமாவாசை பூஜை நாளை துவக்கம்

புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நாளை (9ம் தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜா சாஸ்திரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: மஹாளய பட்சம் ஆரம்பத்திலிருந்து, மஹாளய அமாவாசை முடியவுள்ள 15 நாட்கள் மஹாளய பட்ச புண்ணிய நாட்களாகும். இவை, நம் மீது அன்பும், பாசமும், இரக்கமும் காட்டி வளர்த்து, நமக்காக பல சுகங்களை தியாகம் செய்த முன்னோர்களை வணங்க வேண்டிய நாட்களாகும். இந்த நாட்களில், நமது முன்னோர்கள் வீடு தேடி வந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று ஆசீர்வதிக்கின்றனர். மஹாளய பட்ச ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள் சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று, பூமியை வந்தடைகின்றனர். அவர்கள், நம்முடன் தங்கும் 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், குடும்பத்தில் சண்டையிடுதல், தகாத சொற்கள் பேசுவது, அசைவம் உண்ணுதல், மது குடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த நாட்களில், தங்களது வீட்டில் பூஜை செய்வதை விட, பசுக்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்து, மிக அதிக பலன்களை பெறலாம். இதற்கு கருவடிக்குப்பம், ஓம்சக்தி நகரில் உள்ள கோமாதா ஆலயத்தில், நாளை (9ம் தேதி) முதல் ௨௩ வரை, தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பான பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு, ராஜா சாஸ்திரிகளை 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !