அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4049 days ago
சூலுார் : சூலுார் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. சூலுார் பெரிய குளக்கரையை ஒட்டி, தென்புறம் அமைந்துள்ள மேற்கு அங்காளம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில் திருப்பணிகள் சில ஆண்டுகளாக நடந்தன. கர்ப்ப கிரஹம், விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டப திருப்பணிகள் முடிந்த நிலையில், 4ம்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை 6.00 மணிக்கு நான்காம் கால வேள்வி முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தன. தொடர்ந்து அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை காட்டி, அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.