வேதபுரீஸ்வரர் கோவிலில் கொலு கண்காட்சி
புதுச்சேரி: புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில், வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் கொலு பொம்மை கண்காட்சி துவங்கியது. முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார், துணை பதிவாளர் நாராயணசாமி, தொழில்துறை இயக்குனர் மலர்கண்ணன், மத்திய கைவினை அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் ராமமூர்த்தி, இந்து அறநிலைய துறை ஆணையர் வரதராஜன், என்.ஆர்.காங்., பிரமுகர் சுகுமாறன், சரோஜா திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். அக்டோபர் 3ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. ஜல நாராயணன், கற்பக விருட்சக பெருமாள், ஆனந்த பத்மநாபன், காஞ்சி உலகளந்த பெருமாள், குதிரை குபேரன், பிரதேச செட், குபேர லட்சுமி, தங்க பல்லி, பாண்டவர் துாது பெருமாள், பெரிய கைலாயர் செட் என, பல வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.