கந்தன்பேட் கோவில் 12ம் தேதி கும்பாபிஷேகம்!
ADDED :4048 days ago
பாகூர்: கந்தன்பேட் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 12ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வரும் 10ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நவகிரக ஹோமம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 11ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு ௩ம் கால யாகபூஜை நடக்கிறது. 12ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, கடம் புறப்பாடும் நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, கோவிலில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.