குழந்தை பிறந்ததும் என்ன செய்ய வேண்டும்?
ADDED :4440 days ago
குழந்தைகள் இறைவனால் நமக்கு தரப்படும் கொடை என்கிறது இஸ்லாம். குழந்தை பிறந்ததும் பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவனால் அருளப்பட்ட பாக்கியமாக புதிய வரவைக் கருதுங்கள். இறைவன் ஒரு குழந்தையைப் படைத்து, அதை வளர்க்கும் பேற்றை நமக்கு வழங்கியுள்ளான். நமக்குப் பின்னர் இறைநெறிகளைப் பரப்புவதற்கு வாரிசை அருளியுள்ளான். இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவனை துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு அந்த பேற்றை அருளும்படியும், பிறக்கும் குழந்தை அறிஞனாக விளங்கும் படியும் இறைவனிடம் கெஞ்சுங்கள்.