அபிஷேகம் செய்யும் நாட்கள்!
ADDED :4440 days ago
சுவாமிகளை நாம் பிரார்த்திக்கும் போது, மலர்களால் அர்ச்சனை செய்து அவர்களை குளிர்விக்கும் முகமாக பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நாம் வேண்டிக்கொள்ளும் செயல்கள் எளிதில் நடக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு, சுவாமிகளை அபிஷேகம் செய்து அவர்களது அருளைப்பெற சில குறிப்பிட்ட நாட்கள் அவர்களுக்கு உகந்தநாட்களாக உள்ளன.
ஞாயிறு விநாயகர், நவக்கிரகங்கள்
திங்கள் சிவன்
செவ்வாய் முருகன்
புதன் விஷ்ணு
வியாழன் தட்சிணாமூர்த்தி
வெள்ளி அம்பாள்
சனி சனீஸ்வரன், திருமால்.