உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லபிராட்டியில் தில ஹோமம்

செல்லபிராட்டியில் தில ஹோமம்

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாகாளய அமாவசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து, தில ஹோமம் நடந்தது. இரவு 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !