மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி வழிபாடு!
ADDED :4066 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வெட்டுக்குளம் கிராமத்தில் மழைவேண்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுசெய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றதலைவர் வாசுதேவன், இளைஞர்மன்ற தலைவர் ராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.