உள்ளூர் செய்திகள்

அம்மா மனசு!

ராஜசேகரன் என்னும் பாண்டியமன்னன் 64 கலைகளில் நாட்டியம் தவிர அறுபத்து மூன்றையும் கற்று முடித்தான். சோழநாட்டில் இருந்து வந்த புலவன் ஒருவன், கரிகாற்சோழன் ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் வல்லவன் என்று பெருமையுடன் கூற, பாண்டியனுக்கும் நடனம் கற்கும் எண்ணம் எழுந்தது. வயதான காலத்தில் நடனம் பயின்றதால், மன்னனுக்கு தாளமுடியாத கால்வலி ஏற்பட்டது. தான் அன்றாடம் வணங்கும் சிவன் எப்போதும் திருநடனம்புரிவதால் வலி ஏற்படுமே என்ற கவலையும் வந்தது. தாய் அன்பின் காரணமாகத் தன் பிள்ளை இளைஞனாக இருந்தாலும், கடினமாக வேலை செய்தால் உடல் வருத்தம் உண்டாகுமே என்பது போல மன்னனும் வருந்தினான். அம்மையப்பரான சிவன் பக்தனைக் கண்டு உள்ளம் உருகினார்.பாண்டியனுக்காக சிவன் கால் மாறி நடனமாடினார். அவரே மதுரையில் வெள்ளியம்பல நடராஜராக வீற்றிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !