பழநி சிவன் கோயில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம்
ADDED :3983 days ago
பழநி : ஐப்பசி பவுர்ணமியைமுன்னிட்டு பழநி மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசியில் வரும் பவுர்ணமியில் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கு உணவு படியளக்க வேண்டும் என சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும். நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பழநிமலைக்கோயில் கைலாசநாதருக்கும், பெரியாவுடையார்கோயில், சன்னதிவீதி சோளீஸ்வரர் கோயில், புதுநகர் சிவன்கோயில், மதனபுரம் அண்ணாமலையர் உண்ணாமுலைநாயகி 18 சித்தர்கள் பீடம் உள்ளிட்ட சிவன்கோயில்களில், கும்பகலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம், சிவலிங்கத்திற்கு 16வகையான அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தயிர்,பால் கலந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.