உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ விழா!

வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ விழா!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி  தாயார் சமேத வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ விழா கடந்த 1ம் தேதி  துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப  தரிசனம், 9:00 மணிக்கு அக்னிஆவாகனம், காலை 11:00 மணிக்கு பவித்ரஜெப்பியம் நடத்தப்பட்டு மூலவருக்கு பவித்ர மாலை அணிவிக்கப்பட் டது. தொடர்ந்து 11:30 மணிக்கு மகாசாந்தி ஹோமமும், இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு சிறப்பு  திருமஞ்சனம், காலை 11:30 மணிக்கு மகாசாந்தி ஹோமமும் நடத்தி, கடம் புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு  சாற்று முறை, தீர்த் தப்பிரசாத வினியோகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்யநாராயணன்,  பிரகாஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !