உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை  மாத 3 வது திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார பூஜை நடந்தது. மூலவர் சன்னதி முன்பு புனித கலசம் அலங்கரித்து பூர்ணாஹூதி,  அர்ச்சனை  நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க 108 சங்கில் புனித தீர்த்தம் வைத்து மூலமந்திர ஹோமம் செய்தனர்.   தீர்த்தத்தை கொண்டு மூலவர்  சுயம்பு லிங்கத்திற்கு கங்காபிஷேகம் நடந்தது.  பூஜைகளை கோவில் குருக்கள் நாகராஜ், சோமு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !