மகாதீபத்தை காண திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
ADDED :3968 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய விழாவான மஹா தீபம் நாளை (5ம் தேதி)நடக்கிறது. இதையொட்டி, விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு கோவிலில் ஸ்வாமி சன்னதி முன்பு வண்ண வண்ண பூக்களால் அலங்காரிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப விழாவில் எட்டாம் நாளான நேற்று இரவு நடந்த வானவேடிக்கையில் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் நகர பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.