உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: யாத்திரி நிவாஸ் புக்கிங் துவக்கம்!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: யாத்திரி நிவாஸ் புக்கிங் துவக்கம்!

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நாளை காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, யாத்திரி நிவாஸ் திறக்கப்பட்டு, புங்கிங் நடைபெற்று வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 21ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள், பகல் பத்து உற்சவம் துவங்கியது, நிறைவு நாளான இன்று காலை, நம்பெருமாள், மோகினி அலங்காரமும், நாளை காலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடர்ந்து, ராப்பத்து உற்சவான திருவாய்மொழி திருநாள் நிகழ்ச்சி துவங்கி, ஜனவரி, 7ம் தேதி, நம்பெருமாள், திருக்கைத்தல சேவை புரியவுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தடையில்லா மின்சாரம், கழிப்பறை, குளியல் அறை, வாகனங்கள் நிறுத்த, ஐந்து ஏக்கரில் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அம்மாமண்டபம் முதல், கோவில் வரை, தடுப்பு அமைத்து, தரிசனத்துக்கு வழி செய்துள்ளனர். தவிர, கோவில் அருகில் செல்ல, நான்கு இலவச பஸ் சர்வீஸ் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் தங்க ஏதுவாக, கொள்ளிடம் ஆற்று கரையில், புதிதாக கட்டப்பட்ட யாத்திரி நிவாஸ் திறக்கப்பட்டு, நேற்று முதல் புக்கிங் செய்யப்பட்டது.தவிர, யாத்திரி நிவாஸ் வழியாக பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !