கல்யாண யோகம் வந்தாச்சு!
புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துõர் வரதராஜப்பெருமாள் கோயிலில் போகிப்பண்டிகையன்று ஆண்டாள் திருக்கல்யாண விழா நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்துõரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்தவள் ஆண்டாள். மார்கழி பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடி ஸ்ரீரங்கம் அரங்கனைத் திருமணம் செய்யும் பேறு பெற்றாள். இவள் நல்லாத்துõர் பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கிறாள். ஜன.14 காலை 10 மணிக்கு பெருமாளும், ஆண்டாள் தாயாரும் பவனி வருகின்றனர். 10.30 மணிக்கு ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவமும், 11.00 மணிக்கு சீர்வரிசை தட்டு சமர்ப்பித்தலும், மாங்கல்ய தாரணமும் நடக்கிறது. இதில் பங்கேற்று முகூர்த்த மாலை பெற்றுச் செல்வோருக்கு விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். ஜன.14ல் காலை 11.30 முதல் 1.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரை கோயிலில் முகூர்த்த மாலை வழங்கப்படும். முகூர்த்தமாலை பெற விரும்புபவர்கள் மாலை வாங்கி வர வேண்டும். போன்: 98430 61474, 98941 99562.