குஞ்சிதபாதம்!
நடராஜரின் துõக்கிய இடது காலை குஞ்சிதபாதம் என்பர். குஞ்சிதம் என்றால், வளைந்து தொங்குதல் எனப் பொருள். ஆம்... அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.தஞ்சாவூரில், பாபவிநாச முதலியார் என்ற கவிஞர் வசித்தார். அவர், பாடல் ஒன்றில், நடராஜர், ஏன் இடது காலைத் துõக்கியிருக்கிறார் என்பதற்கு, பல காரணங்களைச் சொல்கிறார்...சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ? என்பது அதில் ஒரு வரி.நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால்,அவளுக்கு பாதம் வலிக்குமென இவர் காலை துõக்கிக் கொண்டாராம். அதாவது சிவனே, நடராஜர் என்னும் பெயரில் நடனமாடுகிறார். அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டார் என்கிறார்.