செஞ்சியில் திரு விளக்கு பூஜை!
ADDED :4093 days ago
செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. காலையில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள், விநாயகர், முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை 7 மணிக்கு தியான மண்டபத்தில் 150 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. பாஸ்கர் சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், விழா குழுவினர் செல்வம், ஜெயராமன், சோமு, தரணி, அரவிந்த், முருகன், ரவி, ரவிச்சந்திரன், பச்சைமுத்து, தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏகாம்பரேஸ்வரர் செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மகா தீபாரதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார்.