உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் ஆலயத்தில் 50 மணி நேர நற்கருணை!

இடைக்காட்டூர் ஆலயத்தில் 50 மணி நேர நற்கருணை!

மானாமதுரை: கிறிஸ்துவர்களின் துறவியர் ஆண்டை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் 50 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை துவங்கியது. இந்த ஆலயம் 1894ல் பிரான்சை சேர்ந்த மரிய அன்னாள் என்பவரால் கட்டப்பட்டது. இங்கு, 22ம் போப் அருளப்பரின் ஆடையின் ஒரு பகுதி, புனிதர்கள் ?? பேரின் திருப்பண்டங்கள் உள்ளன. துறவியர் ஆண்டை முன்னிட்டு 50 மணி நேர தொடர் நற்கருணை பிரார்த்தனையை பிஷப் சூசைமாணிக்கம் நேற்று துவக்கி வைத்தார். புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய குடுவைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன; அவற்றிக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்தது. பாதிரியார்கள் சாமிநாதன், யேசு ஜெபராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !