உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூருவில் அதிருத்ர மகா யக்ஞம்: பஜனை பாடி பக்தர்கள் பரவசம்!

பெங்களூருவில் அதிருத்ர மகா யக்ஞம்: பஜனை பாடி பக்தர்கள் பரவசம்!

பெங்களூரு: சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூருவில் நடைபெற்று வரும்,  அதிருத்ர மகா யக்ஞத்தின், ஆறாம் நாளான நேற்று, வேத பாராயணம், பஜனைகள், அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள பிருந்தாவனில், அதிருத்ர மகா யக்ஞம்’ நடைபெற்று வருகிறது. யக்ஞத்தின், ஆறாம் நாளான நேற்று காலை, வேத பாராயணம், பஜனையை தொடர்ந்து, பகவானுக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ருத்ர ஹோமம், காயத்ரி ஹோமம் நடைபெற்றது. அஷ்டவந்தன சேவைக்குப் பின், மங்கள ஆரத்தியுடன் காலை நேரப் பூஜை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  மாலை, ஸ்ரீசத்ய சாய் உயர் கல்வி நிறுவன பிருந்தாவன் வளாக இயக்குனர், ஸ்ரீ சஞ்சய் சானி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மல்லாடி சகோதரர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பகவானின் அருளுரை ஒலிபரப்பானது. மாலை, 7:00 மணிக்கு நேற்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !