உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டும் பொன்னும் மணியும்!

கொட்டும் பொன்னும் மணியும்!

ராவணனின் தம்பியான குபேரன் தன் தவபலத்தால், சிவனுக்குத் தோழனாகவும், வடதிசைக் காவலனாகவும் இருக்கும் தகுதி பெற்றான். அளகேசன் என்றும் இவனுக்குப்பெயருண்டு. மயிர்க்கூச்சம் ஏற்படச் செய்பவன் என்பது இதன் பொருள். இவனது செல்வ வளத்தைக் கண்டால், உடம்பிலுள்ள ரோமம் எல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் என்பதால் இப்பெயர் உண்டானது. அவனது இருப்பிடமான குபேரபுரிக்கு அளகாபுரி என்றும் பெயர் வந்தது. குபேரனின் வாகனமான புஷ்பக விமானம் செல்லும் இடமெல்லாம் பொன்னும் மணியும் கொட்டும் தன்மை கொண்டது. இவனது தந்தை விச்ரவஸு முனிவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அண்ணன் ராவணனுக்காக இலங்கையை விட்டுக் கொடுத்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !