மவுனமொழி!
ADDED :4266 days ago
கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களை உபதேசம் செய்தவர் தட்சிணாமூர்த்தி. வாய் திறவாமல், மவுனமாகப் பாடம் நடத்தும் இவரை ஊமைத்துரை என்பர். அருணகிரிநாதர் திருப்புகழில் ஊமைத்தேவர் என இவரைக் குறிப்பிடுகிறார். மவுனத்தில் மூன்று வகை உண்டு. உடம்பை அசைக்காமல் கட்டை போல இருப்பது காஷ்ட மவுனம். பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தால் இந்த மவுன நிலையை அடையலாம். வாக் மவுனம் என்பது இரண்டாவது. மவுனவிரதம். மூன்றாவது நிலை மனோமவுனம். மனதை அலைபாய விடாமல் தடுத்து, கடவுளுடன் ஒன்ற வைப்பது இது. இதனைக் கடவுளின் பாஷை என்று சொல்வர். மவுனமாக இருக்கும் போது தான் மனசாட்சியின் குரலை நம்மால் கேட்க முடியும்.