பிரான்-விளக்கம்!
ADDED :4266 days ago
மனிதன் எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும். இந்த நிலையை அடைய வேண்டுமானால், உள்ளத்தில் எப்போதும் கடவுளை தியானிக்க வேண்டும். கடவுளுக்கு பிரான் என்ற பெயருண்டு. இதற்கு உள்ளத்தை விட்டுப் பிரியாதவன் என்று பொருள். நாம் இறைவனுடைய சந்நிதியில் இருக்கின்றோம். அவன் நம்மை ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டுஇருக்கிறான் என எப்போதும் நான் நினைக்கிறேன். எனவே என் உள்ளத்தில் பாவ நினைவு எழுவதுஇல்லை, என்கிறார் வாரியார்.