கட்டுபடுவர்களுக்கு உதவுங்கள்!
ADDED :4266 days ago
டாக்டர் ஒருவர் தினமும் ஜெபம் செய்வார். ஒருமுறை ஒரு ஏழை இளைஞன், தன் மருத்துவ தேவைக்காக அவரைத்தேடி வந்தான். அவனிடம் கடினமான வார்த்தை பேசி விரட்டி விட்டார் டாக்டர். ஜெபம் செய்தால் மட்டும் பலன் கிடைத்து விடாது.ஏழைகளுக்கு யார் ஒருவர்உதவுகிறாரோ, அவரது ஜெபமே ஆண்டவரால் ஏற்கப்படும் என்கிற ரீதியில், பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது.அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்குவஸ்திரம் கொடுக்கிறதும் அல்லவோ எனக்கு (கர்த்தர்) உகந்த உபவாசம், என்று பைபிளில் வசனம் இருக்கிறது.கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதே நிஜமான ஜெபம் என்பது புரிகிறதா!