உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்க்கம் செல்ல எளிய வழி!

சொர்க்கம் செல்ல எளிய வழி!

இறப்புக்கு பின் சுவனம் (சொர்க்கம்) புக வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.நாயகத்திடம் இறைவன்,நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும்பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்லமாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம் உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை நீஒருபோதும் சுவர்க்கம்புகமாட்டாய் என்று கூறும் என்றான். ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நாயகத்திடம், நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை? எனக் கேட்டார்.அதற்கு நாயகம், நேரம் தவறாமல் தொழுவது என்றார்கள்.இதற்கு அடுத்த இடத்தை எந்தச் செயல் பிடிக்கிறது எனக் கேட்டபோது, பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல் என்றார்கள். இக்காலத்தில், பெற்றவர்களைப் பாரமாகக் கருதி விரட்டியடிக்கும் போக்கு இருக்கிறது. இதனால், முதியோர் இல்லங்கள் பெருத்து வருகின்றன. பெற்றவர்களை குமுற வைக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !