மகாவீர் ஜெயந்தி பல்லக்கு ஊர்வலம்!
ADDED :3898 days ago
குன்னுார் : ஊட்டி, குன்னுாரில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், ஜெயின் சமூகத்தினர் சார்பில், மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது.ஊட்டியில் நடந்த விழாவில், அப்பர்பஜார் முதல், கமர்ஷியல் சாலை வரையில், தெய்வீக பாடல்களுடன் ஊர்வலம் நடந்தது. இதில், நுற்றுக்கணக்கான ஜெயின் மக்கள் பங்கேற்றனர்.
குன்னுாரில் மகாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயின் சமூக சங்கம் சார்பில் பல்லக்கு ஊர்வலம்
நடந்தது. விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம் மவுன்ட்ரோடு, பஸ் நிலையம், தாலுகா
அலுவலகம் வழியாக ஜெயின் மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து ஜெயின் மண்டபத்தில் பஜனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ஜெயின் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.