உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா

தூத்துக்குடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா இன்று துவங்குகிறது. தூத்துக்குடி டூவிபுரம் மேல்பாகம், அண்ணாநகர் 2வது தெருவில் உள்ள நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா இன்று துவங்கிவரும் 30ம் தேதிவரை நடக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு இசைபட்டிமன்றமும் நடக்கிறது. நாளை இரவு 9 மணிக்கு சிறுவர் சிறுமியர் பல்சுவை நிகழ்ச்சியும், வரும் 28ம் தேதி காலை 6 மணிக்கு தீர்த்தகரைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மதியம் 12மணிக்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜையம், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகுட கச்சேரியும், இரவு 9 மணிக்கு நேமிசம் மற்றும் மாவிளக்கு ,முளைப்பாரி எடுத்துவருதலும், இரவு 10 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபஆராதனைகளுடன் சாமக்கொடை விழா நடக்கிறது. 29ம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும்,காலை 9மணிக்கு பக்தர்கள் பொங்கிலிடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் மதியகொடையும், அன்று இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 30ம் தேதி இரவு பாட்டிசைப்பட்டிமன்றம் நடக்கிறது. விழாஏற்பாடுகளை தர்மகர்த்தா பால்ராஜ், துணை தர்மகர்த்தாக்கள் சக்திவேல், அமிர்தலிங்கம், செயலாளர் மாரியப்பன், துணைசெயலாளர்கள் மாரியப்பன், சௌந்திரராஜன்,பொருளா ளர் ஜெயமுருகன், கோ வில்நாடார் இளைஞரணி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆலோசகர்கள் மற்றும் வரிதாரர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !