பொன்னாள் இது போலே வருமா இனிமேல்!
ADDED :3962 days ago
பொன்னாளான அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா? நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் சேர்ந்தது. குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார். திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள். பலராமர் அவதரித்த நன்னாள். முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகத்தைப் படைத்த நாள். ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார். திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள். திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.