மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் வீதியுலா!
ADDED :3894 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், நேற்று கொக்கிலமேடு கிராமத்தில் வீதியுலா சென்றார். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது, 8ம் நாள் உற்சவமாக, நேற்று கொக்கிலமேடு கிராமத்தில், ஸ்தலசயன பெருமாள் வீதியுலா சென்றார். கோவிலில் வழக்கமான வழிபாட்டிற்கு பின், பல்லக்கில், ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி, காலை 7:00 மணிக்கு, கொக்கிலமேடு கிராமத்திற்கு புறப்பட்டார். அங்கு சென்றதும், சுவாமியை கிராமவாசிகள் வரவேற்றனர். விநாயகர் கோவில் பகுதியில், மண்டகப்படி உற்சவம் நடந்தது. தொடர்ந்து, கிராம தெருக்களில், சுவாமி வீதியுலா செல்ல, பக்தர்கள் வழிபட்டனர்.பின், மாமல்லபுரம் திரும்பி, இங்கும் வீதியுலா நடந்தது.