உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி விழா!

எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி விழா!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம்  முள்ளிகிராம்பட்டு சாலையில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா  நடந்தது. விழா, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 1ம் தேதி சாகை வார்த்தல் பால் குடம் ஊர்வலமும்; 2ம் தேதி சந்தனக் காப்பு  உற்சவமும் நடந்தது. 3ம் தேதி தீ மிதி விழா நடந்தது. கோவில் பூசாரி முருகன் பூங்கரகத்துடன் தீ மிதிக்க அவரைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட  ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தீ மிதித்தனர். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !