உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் விவேகானந்தர் மண்டபத்தில் சோலார் மின் விளக்குகள்!

ராமேஸ்வரம் விவேகானந்தர் மண்டபத்தில் சோலார் மின் விளக்குகள்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடந்த சமய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று, கப்பலில், பாம்பன் கடற்கரையில் வந்திறங்கியபோது, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி முழங்காலிட்டு வரவேற்றதால், அந்த இடம், குந்துகால் கடற்கரை என, அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில், ராமகிருஷ்ண தபோவனம் சார்பில், 1.20 கோடி ரூபாயில், சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில், 13 லட்சம் ரூபாய் செலவில், சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 6.8 கிலோ வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. மண்டபத்தில் தியான அறையில் குளிர் சாதன இயந்திரமும், பிற பகுதியில், 21 மின் விசிறிகளும், 42 டியூப் லைட்களும், 33 எல்.ஈ.டி., பல்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோலார் மின் விளக்குகளை, கலெக்டர் நந்தகுமார், இன்று திறந்து வைக்க உள்ளதாக, ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் நிர்வாகி சுவாமி ருத்ரானந்தா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !