உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் விழா:அபிஷேகம் செய்த குழந்தைகள்!

காமாட்சியம்மன் கோவில் விழா:அபிஷேகம் செய்த குழந்தைகள்!

ஓசூர்: ஓசூர், கல்யாண காமாட்சி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி, குழந்தைகள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.ஓசூர், பாரதிதாசன் நகரில், கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், 17ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.இதைதொடர்ந்து, காலை, 8 மணி முதல், பகல் 12 மணி வரை அபிஷேக நிகழ்ச்சி நடந்தன. அதன்பின், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, காலை, 6 மணி முதல், 8 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. மேலும், பாரதிதாசன் நகர், ராயகோட்டை ஹட்கோ, காமராஜர் நகர், பெரியார் நகர், அம்மன் நகர், மத்திகிரி, முல்லை நகர், தேர்பேட்டை உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள், அம்மனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !