உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடினால் மனம் கரையும்!

பாடினால் மனம் கரையும்!

ஈரோட்டில், பெரிய மாரியம்மன், சிறிய மாரியம்மன், வாய்க்கால்கரை மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த அம்பிகையருக்கு எலுமிச்சை கனி மாலை சார்த்தி வழிபடுவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அம்மை கண்டால் கோவிலைச் சுற்றி வலம் வருவது வழக்கம். அம்மை கண்ட குழந்தைகளை வாழை இலையில் நெய் தடவி கிடத்தி, வேப்பிலையால் தடவி விட எப்படிப்பட்ட முத்தாக இருந்தாலும் இறங்கி விடும் என்கிறார்கள். சொல்லித் தெரிவதில்லையே- நாங்கள்செய்தபிழை என்னவோ, விக்கின்ற முல்லைக் கொடிபோல்- நாங்களம்மாஇதன் தரம் கண்டு உயிர் தருவாய் மாரியம்மா!வாடுகின்ற பிள்ளைகளைப் பாராயோ!வந்து எங்கள் குறைகளைத் தீராயோ!வாராயோ! வந்து தீராயோ! அம்மா! என்று பாடி பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு அம்மன்  மனம் கரைந்து அருள்வாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !